ஐபிஎல் நிகழ்வுகளில் இத்தனை வருடத்தில், கபில் தேவை ஏதோ ஒரு விதத்தில் நீங்கள் கண்டதுண்டா?
ஓனராகவோ.. தூதுவராகவோ.. சிறப்பு அழைப்பாளராகவோ… காண்பதே ரொம்ப கஷ்டம்…
இத்தனைக்கும் கபில் தேவ்… இந்திய அணிக்காக உலகக் கோப்பையை முதன் முதலில் பெற்று தந்தவர்…
இந்த ஐபிஎல் உருவாக முக்கிய காரணமே கபில்தேவ் தான்…
இருந்தாலும் கபில்தேவ் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
2000 ஆண்டு தொடக்கங்களில் இந்திய கிரிக்கெட் அணி உலக அரங்கில் தடுமாறிக் கொண்டிருந்த பொழுது…
சச்சின் டெண்டுல்கருக்கு பக்கபலமாக இளம் ரத்தம் பாய்ச்ச பல இளைஞர்களை கபில்தேவ் பரிந்துரைக்கிறார்…
அரசியல் காரணமாக முன்னாள் சாம்பியனின் பரிந்துரைகள், BCCI ஆல் நிராகரிக்கப்பட்டு வருகிறது…
பொறுமை இழந்த கபில்தேவ், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க, இந்திய கிரிக்கெட்டை பலப்படுத்த ஒரு முயற்சி மேற்கொள்கிறார்…
அதற்கு ICL “இந்தியன் கிரிக்கெட் லீக்”என பெயர் வைத்து…
வாய்ப்பு மறுக்கப்பட்ட இந்திய இளைஞர்களையும் உலக கிரிக்கெட் வீரர்களையும் அழைத்து இந்தியாவில் விளையாட வைக்கிறார்…
பல மைதானங்கள் BCCI மூலமாக வஞ்சத்தனமாக அவருக்கு தர மறுக்கப்படுகிறது …
இருந்தாலும் பல போட்டிகளை நடத்தி முடித்தார் கபில்தேவ்… 2006 டு 2009 ஆண்டுக்கான சாம்பியன்களையும் உருவாக்கினார்….
சுதாகரித்துக் கொண்ட பிசிசிஐ… ஐபிஎல் எனும் ஒன்றை ஆரம்பிக்கிறது…
கபில் தேவ் நடத்திவரும் ICL விளையாட்டு வீரர்கள் உடனடியாக வெளியே வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்…
ICL ல் விளையாடுபவர்கள் இந்திய அணியில் இடம் பெற முடியாது எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்…
ICL காணாமல் போகிறது… கபில்தேவ் அவர்களையும் முற்றிலுமாக ஒதுக்கி விடுகிறது இந்த பிசிசிஐ…
இன்று நாம் கண்டு களிக்கும் ஐபிஎல்க்கு இந்தியாவில் வித்திட்டவர் கபில்தேவ் மட்டுமே…
பல காரணங்களுக்காக அவர் புகழ் மறைக்கப்படலாம் ஆனால் உண்மை இதுதான்…