2026 ல் தமிழ்நாட்டில், பாஜக ஆட்சியைப் பிடிக்க உதவுவோம் – நடிகர் சரத்குமார்

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற உதவுவோம் என நடிகர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் 18 வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியை பொருத்தவரை 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணி படு தோல்வியை அடைந்துள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த நடிகர் சரத்குமார் சமீபத்தில் கட்சியை கலைத்து பாஜகவுடன் இணைத்தார். பின்னர் நடிகர் சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு,விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார்.

இந்தநிலையில் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாவது முறையாக பிரதமராக பாதவி ஏற்க உள்ள நரேந்திர மோடிக்கு எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நடந்து முடிந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் கணிசமான வாக்குகளை பெற்ற ராதிகா சரத்குமாருக்கு தேர்தல் பணி ஆற்றி இரவு பகல் பாராமல் அயராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் நமது பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து விட்டது என்பதை பறைசாற்றும் விதமாக பாஜகவின் வாக்கு சதவீதம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனை மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடலாம். தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற உதவும் என்று கூறியுள்ளார்.

Leave a Response