பிப்ரவரி 10 அன்று வெளியாகிறது விஜய் சேதுபதி முதன்முறையாக நடித்துள்ள வெப்சீரீஸ்

ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைகிறது. மேலும் இந்தத் தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இந்த “ஃபார்ஸி” கிரைம் த்ரில்லர் திரைப்படம் பிப்ரவரி 10 முதல் இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

மிகப்பெரிய வெற்றி கண்டு சாதனை புரிந்த “தி ஃபேமிலி மேன்” வலைத்தொடரை உருவாக்கிய மிகப்பிரசித்திபெற்ற படைப்பாளிகளின் அடுத்த உருவாக்கம்தான் “ஃபார்ஸி” திரைப்படம். ராஜ் & DKவின் தயாரிப்பு நிறுவனமான D2R ஃபிலிம்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட, இந்த நட்சத்திரக்கூட்டம் நிறைந்த தொடரானது பாலிவுட்டின் ஷாஹித் கபூர் மற்றும் கோலிவுட்டின் நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகத்தைக் குறிக்கிறது.

இந்தத் தொடரில் ராஷி கண்ணா, தேர்ந்த கலைஞரான கே.கே.மேனன், திரைக்குத் மீண்டும் திரும்பும் மூத்த நடிகர் அமோல் பலேகர், ஆகியோருடன் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் புதுமுக நடிகர் புவன் அரோராவும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். க்ரைம் திரில்லர் வகைகளிலேயே ஒரு தனித்துவமான கதைக்களத்தோடு இயக்குநர் இரட்டையர்களின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் அடங்கிய இது எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்து விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளால் நிறைந்தது. செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக் கலைஞனை சுற்றி இதன் கதை பின்னப்பட்டுள்ளது. சீதா ஆர் மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே’யுடன் இணைந்து , ஃபார்ஸி வலைத்தொடருக்கு எழுதியுள்ளனர்.

Leave a Response