செல்ஃபி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணைந்தனர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன்…

ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கூட்டணி இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் எஸ்.நந்த கோபால், மெட்றாஸ் ஸ்டுடியோஸ் சார்பில்அனுஷா பிரபாகர் பிலிம்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் K விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா,ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். பெரும்பாலும் எண் ’13’ என்பது பேய் எண் என்று வழக்கத்தில் குறிப்பிடுவார்கள். இப்படத்திற்கு ’13’ என்று பெயரிடப்பட்டுள்ளதால் இப்படம் ஒரு ஹாரர் படமாக தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது.

சித்து குமார் இசையமைக்க, சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெ.எப்.காஸ்ட்ரோ எடிட்டராகவும், பி.எஸ்.ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறரகள். தொழில்நுட்பக் குழுவில், ஆடை வடிவமைப்பாளர்- ஹினா (கொலைகாரன், பாக்ஸர், முன்னறிவாளன், கோட்டேஷன் கேங் புகழ்), ஸ்டண்ட் மாஸ்டர் – ரக்கர் ராம் (மரகத நாணயம், சிக்சர், ஓ மை கடவுளே, பிசாசு 2, சட்டம் என் கயில், பீட்சா 3), நடன இயக்குனர் – சந்தோஷ் (மேயாத மான், நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், நட்பே துணை, சிறை), ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பற்றிய அறிவிப்பு விழா சென்னையில் உள்ள ஓவர் ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்றது. அந்த் நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இப்படத்தில் நடிக்கக்கூடிய சில நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை பற்றி விசாரிக்கையில், கௌதம் வாசுதேவ் மேனன் வேறு ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதால், இப்படத்தின் அறிவிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

Leave a Response