கொரோனா நிதி வழங்கிய தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு…

தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று தமிழக மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் வெங்கடேஷ், மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் பழனியப்பன், மாநில துணை செயலாளர் நெல்லையப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் மற்றும் மாநில தகவல் தொடர்பு இணைச் செயலாளர் நம்பிராஜன் ஆகியோர் ஒன்று சேர்ந்து, மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோரிடம் பன்னிரெண்டு லட்சம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்கள்.

Leave a Response