‘அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்கும் படம் “அரண்மனை 3”. இதில் ஆர்யா, ராசி கண்ணா மற்றும் சுந்தர் சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரண்மனை 1 மற்றும் 2 ஆம் பாகங்கள் வெற்றிநடை போட்டது. அதன் பிரதிபலிப்பாக 3 ஆம் பாகம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் விவேக், யோகிபாபு, மனோபாலா, ஆண்ட்ரியா, மதுசூதன் ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குனர் சுந்தர் C படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதுவும் குறிப்பாக அரண்மனை சீரீஸ் படங்களில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .
அரண்மனை சீரீஸ் படங்களில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும். ‘அரண்மனை 3’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் முந்தைய இரண்டு படங்களை விட மிகவும் உருக்கமாகவும் தாய்மார்கள் கண்ணீர் சிந்துவது போலவும் அமைந்துள்ளதாம்.
‘அரண்மனை 1 மற்றும் 2’ படங்களில் வரும் கதாநாயகர்களை விட ‘அரண்மனை 3’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
ஆர்யாவில் சினிமா கேரியரில் அரண்மனை 3 ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அரண்மனை 3 படத்தில் யோகிபாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவை காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளதாக படம் பார்த்த சிலர் சொல்கின்றனர். ஆக தியேட்டரில் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து சிதரப்போவது உறுதியாகியுள்ளது.
பொதுவாக அரண்மனை சீரிஸ் படங்களில் இயக்குனர் சுந்தர் C ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதே போல் இப்படத்திலும் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து பல திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாம்.