வெளியானது சூர்யா தயாரிப்பு படத்தின் அடுத்த பாடல்

சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் மற்றுமொரு படைப்பு “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்”. எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அரிசில் மூர்த்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்துள்ளார்.

“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” படத்தின் முன்னோட்டத்தில், 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள். இதற்கான தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதன் போது ஏற்படும் சுவாரசியமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (RARA) வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், Amazon Prime Video இப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் சேவை மூலம் வெளியிடப்பட்ட இப்பாடல் திரைப்படத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை நமக்குத் தருகிறது.

‘காசு’ என்று தலைப்பில் வே. மதன்குமார் எழுதிய இப்பாடலை, பம்பா பாக்யா பாடியுள்ளார். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அரிசில் மூர்த்தி இயக்கிய இத் திரைப்படத்தை ‘2D என்டர்டெயின்மென்ட்’ எனும் தனது பேனரின் கீழ் சூர்யா தயாரித்துள்ளார், RARA செப்டம்பர் 24, 2021 அன்று பிரத்தியேகமாக Amazon Prime Video – இல் வெளியிடப்பட உள்ளது.

Leave a Response