என்ன சொல்ல போகிறாய் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது

Trident Arts R ரவீந்திரன் தயாரிப்பில் அஷ்வின்குமார் லக்ஷ்மிகாந்த் நாயகனாக நடிக்கும் “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் பூஜை இன்று கோலகலமாக நடைபெற்றது !

Trident Arts R ரவீந்திரன் தயாரிக்கும் படம் “என்ன சொல்ல போகிறாய்”. இப்படத்தில் அஸ்வின்குமார் நாயகனாக நடிக்கிறார். இவர் Vijay TV Cooku with Comali நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இப்படம் இன்று காலை எளிமையான பூஜையுடன் சென்னையில் துவங்கியது. இப்படத்தை இயக்குநர் ஹரிஹரன் A இயக்குகிறார்.

தற்போதைய சிக்கலான மருத்துவ சூழலில், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு இப்பூஜை நடைபெற்றது. அதுமட்டுமல்லாது, இப்பூஜை நேரடி ஒளிபரப்பாக, இணையதளத்தில் வெளியானது. ஒரு திரைப்பட பூஜை நேரடியாக இணையத்தில் வெளியாவது இது தான் முதல்முறை.

இது குறித்து இயக்குனர் ஹரிஹரன் A கூறியது,

“துவக்கத்தில் எங்கள் படக்குழு படத்தின் கதாபாத்திரத்திற்கு ஈடுசெய்யும் வகையிலான, ஹீரோயினை தேடும் பணியில் மும்முரமாக இருந்தது. இப்பொழுது, இணையத்தில் தற்போது மிகவும் பிரபலமான திறமை வாய்ந்த அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி இப்படத்தில் இணைந்துள்ளனர். காதல் காமெடி திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் தான் மிகப்பெரும் பங்குவகுகிக்கும். அதனால் கதையின் உயிரோட்டத்தை மேம்படுத்தும் கதாநாயகிகளை தேர்ந்தெடுக்க விரும்பினோம். இருவரையும் ஆடிஷன் செய்த பிறகு, இந்த கதைக்கு பொருத்தமானவர்கள் இவர்கள் தான் என எங்களுக்கு தோன்றியது. அவந்திகா பெங்களூரை சேர்ந்த மாடல் மற்றும் Asku Maaro பாடல் மூலம் பிரபலமானவர்” என்று தெரிவித்தார்.

அஷ்வின்குமார் லக்ஷ்மிகாந்த் , அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் Vijay TV Cooku with Comali பிரபலம் நடிகர் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். படத்தை எழுதி, இயக்குவது A ஹரிஹரன், ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், இசை- விவேக்-மெர்வின், பாடல் வரிகள் – பாலகுமாரன் M, நடன அமைப்பு- அப்சர் பார்த்துகொள்கிறார்கள்.

“என்ன சொல்ல போகிறாய் “ படத்தின் படப்பிடிப்பு, இந்த மாத இறுதியில் துவங்கபடவுள்ளது.

Leave a Response