புதிய இசை ஆல்பத்தில் நடித்துள்ள விஜய் பட நடிகை…

இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸ்சிஸ் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் பாடல் “நீயும் நானும்”.

திரைப்பட இசையமைப்பாளரான ஜான் A அலெக்ஸ்சிஸ் “பழகிய நாட்கள்” எனும் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் மேற்கத்திய நாடுகளில் இசை பயின்றவர். இவர் தமிழ் மீதும், தமிழ் இசை மீதும் அதீத பற்றுகொண்டவர்.

ஜான் A அலெக்ஸ்சிஸ் இசையமைத்திருக்கும் “நீயும் நானும்” எனும் இந்த இசை ஆல்பத்தில், ‘பிகில்’ படத்தில் நடித்த காயத்ரி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான் ஹாஜி என்பவர் நடித்துள்ளார். இப்பாடலின் வரிகளை கவிஞர் கபிலன் எழுத, ஆலுப் ராஜூ பாடியிருக்கிறார்.

தனியிசை பாடல்கள் மேற்கத்திய நாடுகளில் பிரபலம் ஆனதுபோல, தமிழ் இசைப்பாடல்களும் தற்பொழுது பிரபலமாகி வருவது வரவேற்கக்கூடிய ஒரு விஷயமே.

சமீபகாலமாக தமிழ் இசையின் இனிமையும், தமிழகத்தின் பாரம்பரிய வாத்தியக்கருவிகளின் சிறப்பையும் உலகம் மெல்ல உள்வாங்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. “விரைவில் தமிழ் இசைப்பாடல்களுக்கு உலக அரங்கில் தனியிடமே உண்டாகிடும்”, என்கிறார் இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸ்சிஸ்

‘நீயும் நானும்’ பாடலை இசையமைத்து தயாரித்து வெளியிட்டிருக்கும் ஜான் A அலெக்ஸ்சிஸ் தற்போது மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து தனியிசைப்பாடல்கள் இசையமைப்பதிலும் கவனம் செலுத்துவதாக சொல்கிறார் ஜான் A அலெக்ஸ்சிஸ்.

Leave a Response