நாமக்கல் எம்.ஜி.ஆர். நாயகனாக நடிக்கும் படம் “உழைக்கும் கைகள்”. இப்படத்தில் ஜாகுவார் தங்கத்தின் சண்டைப் பயிற்சியில் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் தென்காசியில் படமாக்கப்பட்டுள்ளன.
கிரண்மயி நாயகியாக நடிக்க, போன்டா மணி, பிரேம்நாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாடெங்கும் பத்தி எரியும் விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து எம்.ஜி.ஆர்.படத்தைப் போன்றே இதில் நாமக்கல் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து சமூக பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக தயாரிப்பாளர் கே.சூர்யா கூறினர்.
பல் டாக்டரான இவர் மேலும் கூறுகையில், “பட்டியானாலும், சிட்டியானாலும் இன்னும் யாரும் எம்.ஜி.ஆரை மறக்கவில்லை. நாமக்கல் எம்.ஜி.ஆரை பார்த்தவர்கள் அவரைத் தொட்டுப்பார்த்தும், கிள்ளி பார்த்தும் பிரமித்து போனார்கள். இந்த படம் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் படத்தை பார்ப்பது போலவே இருக்குமாறு செந்தில்நாதனும், நாமக்கல் எம்.ஜி.ஆரும் சேர்ந்து டைரக்ட் பண்ணியிருக்காங்கன்னு இளம் தயாரிப்பாளரான கே.சூர்யா கூறினார்.
சங்கர் கணேஷ் இசையமைக்க செந்தில்நாதன்- நாமக்கல் எம்.ஜி.ஆர் இருவரும் இணைந்து இயக்கி உள்ளர்கள்.
விரைவில் திரைக்கு வருகிறது “உழைக்கும் கைகள்”