பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம் “கடமையை செய்”.
‘நஹார் பிலிம்ஸ்’ மற்றும் ‘கணேஷ் எண்டர்டெயின்மென்ட்’ என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, வேங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர், சுந்தர்.C தயாரித்து நடித்த “முத்தின கத்திரிக்கா” படத்தை இயக்கியவர்.
எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில், கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு இசை அருண்ராஜ். பிரதீப் தினேஷ் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார். நடனம்
தீனா மற்றும் சாய் பாரதி.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்கள், குத்துவிளக்கேற்றி துவைக்கி வைத்தார். படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.