சர்வதேச அளவில் விருதுகளை குவித்திருக்கும் பச்சை விளக்கு

லண்டன், பூடான் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற “பச்சை விளக்கு” திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது.

மணிமேகலை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டாக்டர்.மாறன் ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் படம் “பச்சை விளக்கு”. காதல் கலந்த, சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் திரைப்படமாகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட APP ஆன OTTMOVIE App மற்றும் www.ottmovie.in ஆகிய இணையத்தில் “பச்சை விளக்கு” படம் தீபாவளி முதல் வெளியாக உள்ளது. OTTMOVIE APP யை கூகுல் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே “பச்சை விளக்கு” படத்தை பார்த்து ரசிக்கலாம். அத்துடன், www.ottmovie.in என்ற இணையத்தளம் மூலமாகவும் படத்தை பார்க்கலாம்.
Stay Home.Stay Entertained.

“பச்சை விளக்கு” படம் குறித்து இயக்குநர் மாறன் கூறுகையில், “பிரதமர் மோடி அவர்கள் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சி மூலம் பேசிய போது, சாலை விபத்தினால் உயிர் இழப்பதை குறித்து கண்கலங்கினார். அப்போதே, “பச்சை விளக்கு” மாதிரியான ஒரு படத்தை இயக்குவது என முடிவு செய்துவிட்டேன். இப்படம் சர்வதேச அளவில் 10 விருதுகளை வென்றிருப்பது எங்கள் படக்குழுவுக்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை.

இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதமரின் சிந்தனைக்கு ஏற்ப, இந்தியாவில் உருவாக்கப்பட்ட, அஃப்பான OTTMOVIE App மற்றும் www.ottmovie.in என்ற இணையதளத்திலும் தீபாவளியன்று “பச்சை விளக்கு” படத்தை ரிலீஸ் செய்கிறோம்” என்று தெரிவித்தார்.

Leave a Response