மாய மாளிகையிலிருந்து விரைவில் வெளிவரவிருக்கும் பேய்

சமீபகாலமாக பேய் படங்கள் வெற்றி பெற்று வருவதால், எல்லா இயக்குநர்களும் பேய் கதையை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள். அதிலும் காமெடி, காதல் என கூடுதல் சுவை கொடுக்கிறார்கள். அப்படி ஒரு
வித்தியாசமான காமெடி, காதல், கலந்த ஹாரர் படத்தை K.N.பைஜூ இயக்குகிறார். படத்தின் பெயர் “மாய மாளிகை”

படம் முழுக்க ஒரே பங்களாவில் நடக்கும் கதை.

‘தேவா கிரியேஷன்ஸ்’ மற்றும் ‘நவகிரஹா சினி ஆர்ட்ஸ்’ என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படம் “மாயமாளிகை”

K.N.பைஜூ கதை, திரைக்கதை எழுதி, இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக இரண்டு புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான், கேசவ தேவ், கஞ்சா கருப்பு, சம்பத்ராம், முத்துக்காளை ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்

இசை – அஜெய் ஸரிகமா

பாடல்கள் – சினேகன்

தயாரிப்பு – A.P.கேசவ தேவ்

கதை, திரைக்கதை, இயக்கம் – K.N.பைஜூ

படம் பற்றி நாயகனும், இயக்குனருமான K.N.பைஜூ கூறியதாவது,

“காதல், காமெடி, கலந்த ஹாரர் படம். திருமணமான நாயகன், நாயகி இருவரும் தேனிலவுக்கு மலை பிரதேசத்தில் தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கரில் உள்ள பங்களாவிற்கு செல்கிறார்கள். அங்கே போனவுடன் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன.

அங்கே இருக்கும் பேய் அந்த தம்பதிகளிடம் 40 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்கிறது. அந்த சம்பவத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் திரைக்கதை.
முதல் பாதி முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாகவும், இரண்டாவது பாதி காதல் கலந்த ஹாரராகவும் இருக்கும். வழக்கமான பேய் படங்களை போல் இல்லாமல் ஒரு வித்யாசமான முயற்சியை இந்த படத்தில் கையாண்டிருக்கிறார்கள். அது படம் வெளியான பிறகு மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெரும். முதன் முறையாக ரியாஸ்கான் இந்த படத்தில் பக்கா காமெடியனாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க பங்களாவிற்குள்ளேயே நடக்கும் கதை இது” என்று கூறினார்.

Leave a Response