ஸ்டாண்டப் காமெடியை சமைப்பது எப்படி என்பதை விளக்குகிறார்கள் பிரபல நகைச்சுவையாளர்கள்

அபிஷ் மாத்யூவும், வித்யுலேகா ராமனும் ஸ்டான் ட் அப் காமெடியை சமைப்பது எப்படி என்பதற்கான சமையல் குறிப்பைப் பகிர்கிறார்கள்

அமேசானின் அசல் தயாரிப்பான காமிக்ஸ்தானின் தமிழ் வடிவமான “காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா”, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் செப்டம்பர் 11ஆம் தேதியன்று பிரத்யேகமாக வெளியானது.

இந்த நிகழ்ச்சியில் தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். தமிழ் ஸ்டான்ட் அப் காமெடி மேடைகளின் ராஜாவாக அல்லது ராணியாகத் தேர்வாக இந்தப் போட்டியாளர்கள் போட்டியிடுவார்கள்.  

சமீபத்தில் அபிஷ் மாத்யூ மற்றும் வித்யுலேகா ராமன் இடையே நடந்த நகைச்சுவை உரையாடலை அமேசான் ப்ரைம் பகிர்ந்துள்ளது. ஸ்டான்ட் அப் காமெடி சமைப்பது எப்படி என்கிற சமையல் குறிப்பை இவர்கள் இருவரும் பகிர்ந்துள்ளார்கள்.

ஒரு செஃப்பைப் போல கச்சிதமாக தோற்றமளிக்கும் வித்யுலேகாவுடன், அபிஷ் மேத்யூ இணையம் மூலம் கலந்து பேசி, சரியான விகிதத்தில், உரிய பொருட்களை சேர்ப்பது எப்படி என்று சொல்லியிருக்கிறார். ஸ்டான்ட் அப் நகைச்சுவையாளராக வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது.

‘ஒன்லி மச் லவுடர்’ தயாரிக்கும் காமிக்ஸ்தான் தமிழை, அர்ஜுன் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஜெய் ஆதித்யா, மெர்வின் ரொஸாரியோ ஆகியோர் எழுதியுள்ளனர். காமிக்ஸ்தான் தமிழின் அனைத்து பகுதிகளையும், அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாகக் கண்டு மகிழுங்கள். இந்த வாரத்தை புன்னகையுடன் துவங்குங்கள்.

Leave a Response