இந்த நடிகர், கமல் ரசிகரா? இளையராஜா ரசிகரா?

பாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மை திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமான பாடல் “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் இடம்பெற்ற ‘கைவச்சாலும் வைக்காம’ என்ற பாடல்.

சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் “மைக்கேல் மதன காமராஜன்”. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வைச்சாலும் வைக்கம’ என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. தற்போது இந்தப் பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது “டிக்கிலோனா” படக்குழு. தற்கால இசையைச் சேர்த்து, இப்போதுள்ள இளைஞர்களும் கொண்டாடும் வகையில் செய்திருப்பதே மார்டனைஸ் என்பதன் பொருள்.

இதற்கான உரிமையை இசைஞானி இளையராஜாவிடமிருந்து வாங்கி, “டிக்கிலோனா” படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன். கமலஹாசன் நடித்து இளையராஜா இசையமைத்து ‘வைச்சாலும் வைக்காம’ என்ற பாடலை சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தில் இணைத்திருப்பதால், இவர் கமல் ரசிகரா அல்லது இளையராஜாவின் ரசிகரா என்று யோசிக்கவைக்கிறது. ஆகையால், அதே போன்றதொரு காமெடி கலட்டாவை “டிக்கிலோனா” படத்திலும் இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். இதில் ஒரு சிறுபகுதியை மட்டும் ‘டிக்கிலோனா’ ட்ரெய்லரில் காட்டியிருந்தது படக்குழு.

அதே போல் ட்ரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் இப்போதும் ட்ரெண்ட்டாகி வருவது இதற்கு ஒரு சான்று. சந்தானம் படங்களின் ட்ரெய்லர்களில் குறைந்த மணி நேரத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட ட்ரெய்லராக “டிக்கிலோனா” உருவாகியுள்ளது. இதுவரை 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

கார்த்திக் யோகியின் கலகலப்பான இயக்கம், சந்தானத்தின் கவுண்டர் வசனங்கள், யுவனின் மயக்கும் இசை, யோகி பாபுவின் அசத்தல் காமெடி, ஆனந்தராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடைய கலாட்டாக்கள் என அனைத்தும் ஒரே படத்தில் இணைந்துள்ளதே இந்த வெற்றிக்குச் சான்று.

கார்த்திக் யோகி இயக்கியுள்ள “டிக்கிலோனா” படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணம், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்வி, எடிட்டராக ஜோமின், சண்டைக் காட்சிகள் இயக்குநராக தினேஷ் சுப்பராயன், பாடலாசிரியர்களாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண், நடன இயக்குநராக ஷெரீஃப் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

பார்வையாளர்களை எப்படியெல்லாம் கவலைகளை மறந்து சிரிக்க வைப்பது என்பதற்காகவே இரவு- பகல் பாராமல் உழைத்து வருகிறது “டிக்கிலோனா” படக்குழு. விரைவில் நமக்கெல்லாம் ஒரு தலைவாழை காமெடி விருந்து காத்திருக்கிறது.

Leave a Response