வடசென்னை நாயகனா அல்லது தாதாவா இந்த சம்பத் ராம்?

ஆக்சன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான திரைப்படம் முதல்வன். இத்திரைப்படத்தில் முதன் முதலில் துணை நடிகராக அறிமுகமானவர் தான் சம்பத் ராம். பின்பு பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சம்பத் ராம் 2001-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த தவசி திரைப்படத்தில் ஊமையாக நடித்ததன் மூலம் முக்கிய நடிகராக வெளியில் தெரிய ஆரம்பித்தார். பின்பு அதே ஆண்டில் அஜித் அவர்களுக்கு திருப்பு முனையாக நடித்து வெளிவந்த தீனா திரைப்படத்தில் படம் முழுக்க அஜித்தின் நண்பராக நடித்தார். 1999-ம் ஆண்டு முதல் 2020 வரை இருபது ஆண்டுகளில் சுமார் இருநூறு திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து முடித்திருக்கும் சம்பத் ராம் அடுத்ததாக நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் “கசகசா”.

வடசென்னை பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகனுக்கு இணையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்பத் ராம் இந்த திரைப்படம் தனக்கு முக்கிய திருப்பு முனையாக அமையும் என்று கூறியிருக்கிறார்.

சுடர் நிலா கிரியேஷன்ஸ் சார்பாக டாக்டர் தமிழ்ச்சுடர் அவர்கள் கதை, திரைக்கதை, வசனம், எழுதி, தயாரித்து, இயக்கி, ஒளிப்பதிவும் அவரே செய்திருப்பது இத்திரைப்படத்திற்கு மேலும் சிறப்பு. இசை ரசாந்த் ஆர்வின்.

சம்பத் ராம் அவர்கள் ராகவா லாரன்சுடன் காஞ்சனா 1, காஞ்சனா 3 உள்ளிட்ட நான்கு திரைப்படங்களில் நடித்து இருப்பதால் நட்பு ரீதியாக ராகவா லாரன்ஸ் அவர்களால் ட்விட்டரில் நேற்று இத்திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.

வடசென்னையான வண்ணாரப்பேட்டையில் தான், தான் பிறந்து வளர்ந்ததாக கூறும் சம்பத் ராம் தனக்கு மனைவி மற்றும் கல்லூரியில் பயிலும் ஒரே ஒரு மகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களில் பெரிய ஹீரோக்களான விஜய்யுடன் புலி, ராகவா லாரன்சுடன் காஞ்சானா 3, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நண்பராக நடித்த கபாலி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள சம்பத் ராம், விஜய் சேதுபதிக்கு வில்லனகனாகவும், நிச்சயம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் திருநங்கையாக நடிக்க வேண்டும் என்றும் ஆர்வம் தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் P.வாசு அவர்களின் இயக்கத்தில் சந்திரமுகி-2 உருவாக்கப்பட இருப்பதாகவும் அத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

திரு.சம்பத் ராம் அவர்கள் மென்மேலும் வளர, உயர நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்….

Leave a Response