ஆகஸ்ட் 14அன்று லாக்கப்பிலிருந்து வெளியாகும் நடிகர்கள்

நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான “லாக்கப்” படத்தின் சிலிர்க்க வைக்கும் டீஸர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 OTT தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது.

மிகப்பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த, பல வகையான சிறந்த படைப்புகளை தொடர்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ZEE5-ன் சமீபத்திய ஒரிஜினல் திரைப்படமான “லாக்கப்” மிகச்சிறந்த, சிலிர்க்க வைக்கும் திரில்லருடன் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டுவரும் அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த த்ரில்லர் படத்தில் இதற்கு முன் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது முதலே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

அறிமுக இயக்குனரான S.G.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர் வைபவ் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். அவர்களை தவிர்த்து, இப்படத்தில் பூர்ணா மற்றும் ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை நித்தின்சத்யாவின் ‘ஸ்வேத் – எ நித்தின்சத்யா புரோடக்‌ஷன் ஹவுஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னணி இசையமைப்பாளரான அரோல் கொரேலி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

திறன்மிகு ஒளிப்பதிவாளரான சந்தானம் சேகரின் ஒளிப்பதிவில் படமாகியுள்ள “லாக்கப்” திரைப்படத்தை ஆனந்த் ஜெரால்ட் எடிட்டிங் செய்துள்ளார்.

Leave a Response