சூழ்நிலையைப் பொருத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி..

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஜூன் 6) காலை ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மாநாடு நடந்தது.

மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் பழனிசாமி, ஆற்றிய தலைமையுரை:

ஏற்கனவே 17 நிறுவனங்களுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆலைகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொழிலதிபர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியுள்ளது.

இயல்பு நிலை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இன்னும் தமிழகத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்படும்.

கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் பொருத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். மேலும், தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Response