இந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று – ராகுல் காந்தி..

இந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். தொற்று அதிகரிக்கும் போதே தளர்வுகளும் அதிகரிக்கின்றன. மேலும் ஏழைகள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உலகப் போரின்போது கூட இந்தளவு முடக்க நிலை ஏற்பட்டதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இந்தியாவில் நாம் இப்போது பார்ப்பது ஊரடங்கு தோல்வியின் விளைவுகளே, கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் மத்திய அரசு என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது? மத்திய அரசு மாநில அரசுகளை ஆதரிக்க வேண்டும், மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய ஆதரவு இல்லாமல் செயல்படுவது கடினம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல மத்திய அரசு மக்களுக்கு நேரடியாகப் பணத்தைச் செலுத்த வேண்டும். அவர்கள் அதைச் செய்யாவிட்டால் ஆபத்தில்தான் முடியும். மாநில முதல்வர்கள், தங்கள் தனியாக இந்த போரில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்கள்.

அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் மத்திய அரசு என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது? மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் பொருளாதார ஊக்கத்தொகை என்று பிரதமர் கூறினார், ஆனால் உண்மையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாக தான் அந்த தொகை உள்ளது. அதிலும் பெரும்பாலும் கடன்கள்தான் வழங்கப்பட உள்ளன. எந்தவொரு பணமும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படப்போவதில்லை என மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Response