சிறுமி கொலை! குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் என பத்திரிகையாளர் கோரிக்கை!!

இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே கண்கலங்க வைத்த செய்தி, சிறுமி ஜெய்ஸ்ரீ கொலை. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15). இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

மே 09 அன்று, அதே கிராமத்தை சேர்ந்த ஆளும் அ.இ.அ.தி.மு.க’வை சேர்ந்த முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் ஜெயபால் வீட்டிற்குள் நுழைந்து, அங்கு தனியாக இருந்த ஜெய்ஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொழுத்தியுள்ளனர். தீ வாடை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர், ஜெய்ஸ்ரீயை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஜெய்ஸ்ரீயை மருத்துவமனையில் காவல்துறையினர் விசரித்துள்ளார், பிறகு நீதிமன்ற நடுவர் நேரில் ஜெய்ஸ்ரீயை சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அந்த வாக்குமூலத்தில், தன்னை முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி கொழுதியுள்ளயகாக சொல்லியுள்ளார்.

சிறுமி ஜெயஸ்ரீயின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன் மற்றும் கலியபெருமாள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரின் கொடூர செயலுக்கு பொதுமக்கள் அனைவரும் அந்த இரண்டு அரக்கர்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என தங்களது ஆதங்கமாக தெரிவித்து வருகின்றனர். சமுக வலைத்தளங்களில் சிறுமி ஜெய்ஸ்ரீயின் கொடூர கொலைக்கு உடனடி நீதி வேண்டும்… கொலைகார அரக்கர்களை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என பலர் பலவிதமாக தங்களுடைய ஆதங்கங்களை பதிவிட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இந்த கொலைக்காரர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக வேண்டாம் என மூத்த பத்திரிகையாளர் கோடங்கி@ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய பத்திரிக்கை அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோடங்கி தன்னிடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “மனம் நிறைந்த வேதனையுடன் ஒரு பத்திரிகையாளனாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தையும், அந்த மாணவியின் மரண வாக்குமூலத்தையும் பார்த்த ஒவ்வொருவரும் ஒரு கணம் மூச்சை நிறுத்தி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருப்போம்.

இந்த படுபாதக கொடூர செயலை செய்த அதிமுகவை சேர்ந்த கலியபெருமாள், முருகன் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி அளித்து தனது கடமையை முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி முடித்து கொண்டார்.

எதிர்க்கட்சிகளும் நிவாரண நிதி அறிவித்து சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் தமிழக காவல்துறை இந்த படு பாதக கொடூர அரக்கத்தனமான மனித மிருகங்கள் எந்த சூழ்நிலைகளிலும் தப்பித்து விட முடியாதபடி மிக கவனமாக சட்ட ஆவணங்களை உருவாக்கி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

அதோடு, விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் அல்லது தமிழகத்தில் உள்ள எந்த ஒரு வழக்கறிஞரும் இந்த கொலைகார மனித மிருகங்கங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

எந்த வழக்கறிஞர்களும் இது போன்ற கொடூர கொலைகார மனித மிருகங்களுக்கு ஆஜராகாமல் தவிர்த்தால் இனி இதுபோன்ற கொடூர சிந்தனை கூட யாருக்கும் வராது.
அதோடு இந்த மனித மிருங்கங்களின் வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து உடனடியாக அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய திரு நாட்டில் எல்லா அதிகாரங்களை விட நீதியை நிலை நாட்டும் நீதிமன்றங்களும், நீதியரசர்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது என நம்பிக்கை வைக்கும் சராசரி குடிமகனாக இந்த கோரிக்கையை வைக்கிறேன்.” என தன்னுடைய அறிக்கையில் கோடங்கி வேண்டுகோள் வைத்துள்ளார்.

Leave a Response