ஆவிகளை அடக்கும் அம்மனாக சிவகாமி வருகிறாள்

பெரு வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”.
மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக, ஆவிகள் பேய்களை அடக்கும் அம்மன் படமாக, ஹாரர் கலந்து கலக்க வருகிறது “சிவகாமி” திரைப்படம். ஜே எம் பஷீர், MD Cinemas AM.சௌத்ரி இணைந்து “சிவகாமி” படத்தை வெளியிடுகிறார். இணை தயாரிப்பாளர்களாக தங்கராஜ் ,முத்துகுமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் இப்படத்தின் இசை விழா 27.2.20 அன்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழு, பத்திரிக்கையாளர்கள், பிரபலங்களான நடிகர் தயாரிப்பாளர் ஜே எம் பஷீர், நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், MD Cinemas AM.சௌத்ரி, இணை தயாரிப்பாளர்கள் தங்கராஜ், முத்துகுமார் உட்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியது,

“நான் படத்தில் நடிக்கும் முன் ராதாரவி அண்ணனிடம் ஆலோசனை கேட்டேன். கடுமையாக திட்டிவிட்டார். பொறாமையில் சொல்கிறார் என நான் நடிக்க போய்விட்டேன். ஆனால் அவர் சொன்னது நல்லதற்குத்தான். கஷ்ட காலங்களில் நிறைய நல்ல அறிவுரை தருவார். மீடியாவில் என்னைப் பற்றி நிறைய தவறான தகவல்கள் வந்துவிட்டது. பரவாயில்லை. நான் எல்லாவற்றிலும் ஜெயித்து வருவேன். “சிவகாமி” படம் பார்க்க நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற படகுழுவுக்கு வாழ்த்துகள்” என்று வாழ்த்தினர்.

நடிகர் ராதாரவி பேசுகையில்,

“இங்கு வந்திருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு வாழ்த்துகள். “சிவகாமி” படம் மிக அருமையான படம். காட்சிகள் மிக பிரமாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் மிகத் திறமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்துள்ள எனது டப்பிங் குடும்ப நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த “சிவகாமி” படம் சமூகத்திற்கு தேவையான படம். பெண் பாதுகாப்பு தற்போதைய காலகட்டத்தில் அவசியமான தேவையாக இருக்கிறது. இந்தபடத்தில் சுஹாசினி தவிர அனைவரும் புதுமுகங்கள். ஆனால் படத்தை பிரமாண்டமாக எடுத்துள்ளார்கள். கதாநாயகி அழகாக இருக்கிறார். சாமி மாதிரியே இருக்கிறார். அனைவரும் இப்படத்தை வாழ்த்த வேண்டும். பெண் குழந்தையை காக்க வேண்டும் என இந்தப்படம் சொல்கிறது. எல்லோரும் இந்தப்படத்தை பாருங்கள் வாழ்த்துங்கள் நன்றி” என்று பேசினார்.

Leave a Response