சிங் நடிக்கும் படத்தில் கிங் நடிக்கிறார்.

‘ஷேண்டோ ஸ்டுடியோஸ்’ & ‘சினிமாஸ் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் “படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா இப்படத்தில் கதாநாயகியாக இணைந்து நடிக்கிறார் .

தற்போது பிரண்ட்ஷிப் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார் .
நடிகர் அர்ஜுன், தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உட்பட 150 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1993-ல் சங்கர் இயக்கத்தில் வெளியான “ஜென்டில்மேன்” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அதை தொடர்ந்து “ஜெயஹிந்த்”, “கர்ணா”, “குருதிப்புனல்” போன்ற வெற்றி படங்களில் நடித்தார். 2013 ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “கடல்” படத்தில் கடத்தல்காரர் வேடத்தில் நடித்தார். நடிகர் அர்ஜுன் சில படங்களை இயக்கியுள்ளார்.

“பிரெண்ட்ஷிப்” படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கியுள்ளனர்.

“பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் சம்மர் 2020 இல் பிரமாண்டமாக திரைக்கு வருகிறது .

Leave a Response