அப்படி என்ன படம் அது என்று என்னை கேட்டார்கள் – வாணி போஜன்…

எல்லோருடமும் இளமை மாறாத ஒரே உணர்வு காதல். தமிழ் சினிமாவில் காதல் படங்களே வராதா ஏக்கத்தை போக்க, இளமை பொங்கும் படைப்பாக,  தற்கால நவீன இளைஞரகளின் வாழ்வை அழகாய் சொல்லும் படமாக வருகிறது “ஓ மை கடவுளே”. இப்படத்தில் ஷாக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன இப்படத்தில் வாணி போஜன் ஒரு முக்கிய கதாபாத்திரமேற்று நடித்துள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பு சில தினங்கள் முன்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகை வாணி போஜன் பேசியதாவது, “ஒரு படம் செய்யும் போது அந்தப்படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அந்தப்படம் பிடித்திருக்க வேண்டும். இந்தப்படம் அப்படிபட்ட படம். நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் முதலில் “ஓ மை கடவுளே” ரிலீஸ் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்படி என்ன படம் அது என்று என்னை எல்லோரும் கேட்டார்கள். இது எங்கள் படம், நாம்  தான் தயாரிப்பாளர் போல் இருக்கிறோம் என்று அசோக்கிடம் சொன்னேன். எல்லோரும் நண்பர்கள் போல் இணைந்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார் வாணி போஜன்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ‘ஆக்சஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு, ‘ஹாப்பி ஹை பிக்ச்சர்ஸ்’ அபிநயா செல்வமுடன் இணைந்து  தயாரித்துள்ளார். ‘சக்தி பிலிம் பேக்டரி’ இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Leave a Response