சினிமாவில் தான் இருக்கிறேன்! மீண்டு வருவேன்!! என்ற உறுதியுடன் பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் தயரிப்பாளர்!!

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படம் மூலமாக 2010ம் ஆண்டு 24AM ஸ்டுடியோஸ் என்னும் விளம்பர ஆலோசனை நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல தமிழ் திரைப்படங்களுக்கு புதுவிதமான மற்றும் வித்யாசமான விளபம்பர யுக்திகளை மேற்கொண்டவர் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.டி.ராஜா. 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல வெற்றி படங்களுக்கு விளம்பர பணி செய்து வந்த ஆர்.டி.ராஜா, 2013ம் ஆண்டு ‘தேசிங்கு ராஜா’ திரைப்படம் மூலமாக நிர்வாக தயாரிப்பாளராக தனது பணியை உயர்த்தி கொண்டார் ஆர்.டி.ராஜா.

நிர்வாக தயாரிப்பாளராக நான்கு படங்களில் பணியாற்றிய ஆர்.டி.ராஜா 2016ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிக்க ‘ரெமோ’என்னும் திரைப்படத்தை தன்னுடைய 24AM ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து தயரிப்பாளர் அந்தஸ்தை அடைந்தார் ஆர்.டி.ராஜா. ‘ரெமோ’ திரைப்படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ மற்றும் ‘சீமராஜா’ திரைப்படங்களை தன்னுடைய 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலமாக தயாரித்தார் ஆர்.டி.ராஜா.

‘ரெமோ’ மற்றும் ‘வேலைக்காரன்’ ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்று லாபம் ஈட்டிய திரைப்படங்களாக அமைந்தாலும், ‘சீமராஜா’ ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றாலும் வர்த்தக ரீதியாக தோல்வியை சந்தித்ததாக சினிமா வட்டாரங்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்தன. ‘சீமராஜா’ படத்தின் வர்த்தக தோல்வியால் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கடன் பிரச்சனையில் சிக்கி கொண்டார். அவரால் மீண்டும் படம் தயாரிக்க முடியாது, அவர் அலுவலகம் நோக்கி விநியோகஸ்தர்கள் மற்றும் கடன் கொடுத்தவர்கள் படையெடுப்பு என திரைத்துறையில் சிலர் பேச, அதே ஊடகங்களிலும் செய்தியாக வர பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார் ஆர்.டி.ராஜா. இத்தகைய மன உளைச்சலையும் சந்தித்த ஆர்.டி.ராஜா சற்றும் தளராமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தினை தயாரிக்க ஆரம்பித்தார்.

இந்த புதிய படத்தினை இயகிக்கும் ரவிக்குமார், இதற்கு முன்பு “இன்று நேற்று நாளை” என்னும் வெற்றி படத்தினை இயக்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றியமையாத படமாக, மிகப்பெரும் பட்ஜெட்டில் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் படத்திற்க்கு “அயலான்”  எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘அயலான்’ திரைப்படம் பற்றி 24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியதாவாது, “எங்கள் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் அயலான் படத்தின் தலைப்பிற்கு இணையமே கலங்கும், மிகப்பெரும் வரவேற்பு கிடைத்திப்பது பெரு மகிழ்ச்சி. மேலும் எங்கள் கோரிக்கையின் பேரில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தலைப்பை அறிவித்தது எங்களுக்கு பெருமை. இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது சொந்தப் படம் போல் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். எங்களையும், படம் பற்றிய ஒவ்வொரு சிறு வேலைகளிலும் வெகுவாக ஊக்குவித்தார். தலைப்பிற்காக அவர் உருவாக்கிய ஒரு இசைத்துணுக்கே அபாரமானதாக இருந்தது. அவரது இசை இப்படத்தின் முதுகெலும்பாக இருக்கும்.

‘அயலான்’ என்பது படத்தின் கருவை மையப்படுத்திய தலைப்பு. அயலான் என்றால் ஏலியன் என்பது அர்த்தம். (Destination Earth) சென்றடையும் இலக்கு பூமி என குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் எளிதாக  புரிந்து கொள்வார்கள். நாம் அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தை சொன்னாலும் படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. இத்தருணத்தில் படத்தின் படப்பிடிப்பு வெகு துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. தமிழின் பிரமாண்டமான் அறிவியல் புனைகதை (சயின்ஸ் பிக்ஷன்) படமாக இப்படம் உருவாகிறது. எனவே படத்தில் அதிகளவிலான  விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின்போதே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் மற்றும் 24AM ஸ்டுடியோஸ் ஆன எங்கள் நிறுவனதிற்கு மட்டுமல்லாது தமிழ் சினிமாவிற்கே மிக சிறந்ததொரு பெருமையான படைப்பாக இப்படம் இருக்கும்.”
என ஆர்.டி.ராஜா கூறினார்.

24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க, கே.ஜே. ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் கொட்டாப்படி ஜே ராஜேஷ் இப்படத்தை வெளியிடுகிறார். பிரமாண்ட அறிவியல் புனைவு படமாக உருவாகும் இந்த “அயலான்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு மற்றும் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அகாடமி அவார்ட் வின்னர்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்போது உங்களுக்கு புரியும் மேலே குறிப்பிட்டுள்ள தலைப்பான சினிமாவில் தான் இருக்கிறேன்! மீண்டு வருவேன் என்ற உறுதியுடன் பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் தயரிப்பாளர்!! என்பதே இந்த செய்திக்கு உகந்த தலைப்பு என்று!

மீண்டும் பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வெற்றிபெற வாழ்த்துக்கள் மிஸ்டர் ஆர்.டி.ராஜா…

டைட்டில் மோஷன் போஸ்டரை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்:

Leave a Response