பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான்(PMJKYPPA) அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த வாகன ஊர்வலத்தை பறை சாற்றி நடத்தி சென்றனர் PMJKYPPA’வின் தமிழக பொறுப்பாளர்கள்.
இந்த நிகழ்வில் திரு. கண்ணன் கேசவன் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகியாகவும், திரு. செந்தில், திரு.பால்ராஜ், திரு.ஜீவரத்தினம் ஆகியோர் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.
நம்மவர் மோடி எனும் இருசக்கர ஊர்வலத்தை அதன் தேசிய தலைவர் ஜெய் கோஷ் திவேதி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
ஊர்வலம் முன்னோட்டம் சென்ற கேளம்பாக்கம் மற்றும் படூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
PMJKYPPA (Tamilnadu & Puducherry) என்பது ஒரு இயக்கம். மக்களுக்கு தொண்டு செய்ய பாரத பிரதமரால் உருவாக்கப்பட்ட திட்டம். இது பாஜக’வின் கட்சி சார்ந்த திட்டமல்ல.
இந்த இயக்கமானது 4 மந்திரிகள், 7 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற ஆட்சியர்கள் ஆகியோரை கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த நம்மவர் மோடி இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தின் நோக்கம் கீழ்வருமாறு:
1. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்தி, பயனாளிகளை உருவாக்கும் PMJKYPPA (Tamilnadu & Puducherry) பிரிவை மக்களுக்கு அறிமுகப்படுத்துவது.
2. இந்த அமைப்பில் உள்ள மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
3. இந்த பைக் ரேலி செல்வதன் மூலம் மக்களின் கவனம் ஈர்க்கப்படும். இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு வெகுஜன மக்களிடையே ஏற்படும்.
4. இதனை மக்கள் அறியும் போது அதை முழுமையாக பயன்படுத்தவும் பயன் அடையவும் முடியும்.
5. முதலில் 50 பேரை கொண்டு இந்த பைக் ரேலியை ஆரம்பிக்க திட்டமிட்டோம். ஆனால் தற்போது 2000 பேர் வரை இந்த பைக் ரேலிக்கு வர தயாராகவுள்ளனர்.
பைக் ரேலி ஊர்வலம் முடிந்த பிறகு, பத்திரிகையாளர்களை PMJKYPPA அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் எல்லா தாலுக்காக்களிலும் முகாம் வைத்து இதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
விவசாயிகளின் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட 165 திட்டங்கள் பற்றிய பிரச்சாரங்களை செய்ய உள்ளோம்.
சென்னையில் தொடங்கி தொடர்ந்து 48 நாட்கள் முழுவதும் நடத்தி மீண்டும் சென்னைக்கு வந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதில் மத்திய மந்திரிகள் கலந்துக் கொள்வார்கள்.
நிறைய திட்டங்கள் இருந்தும் சாதாரண மக்களிடம் திட்டங்கள் சென்று சேர்வதில்லை என்பதால் இந்த வழியில் மக்களிடம் சென்றடைய உள்ளோம்.
முக்கியமாக முத்ரா திட்டம். இந்த திட்டத்தை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முத்ரா லோன் அதிகமாக பெறப்பட்டுள்ளது. இது போல சில திட்டங்களை மக்களுக்கு தெரிகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதே மத்திய அரசுதான் என்பது பலருக்கும் தெரியவில்லை. அதனையும் இந்த பைப் ரேலி விழிப்புணர்வு மூலம் தெரியப்படுத்துவோம்.
மேலும் மத்திய அரசின் நிறைய திட்டங்கள் தமிழக மக்களுக்கு சென்று அடைவதில்லை. எனவே தான் நாங்கள் களத்தில் நேரடியாக இறங்கி செயல்பட உள்ளோம்.” என PMJKYPPA அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் PMJKYPPA தேசிய பொதுச்செயலாளர் ஜெய் கோஷ் திவேதி உடனிருந்தார்.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்குமார் சேர்மக்கனியும், காஞ்சிபுர மாவட்ட நிர்வாகியான திரு.கண்ணன் கேசவன் இருவரையும் தேசிய பொதுச் செயலாளரும் மாநில பொதுச் செயலாளரும் பெரிதும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டங்களை அறிமுகப்படுத்த இத்தகைய ஒரு பைக் ரேலியை நடத்துவதை பார்க்கும் போது, தமிழகத்தில் பாஜக’வை மூலை முடக்குகளில் கால்பதிக்க முயற்சி செய்யும் திட்டமாகவே தெரிகிறது.