மாணவர்களை சந்தித்து உரையாடிய நடிகர் விஷால்…

நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் போது செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். அதே வேளையில் சமூக சிந்தனையுடன் பல போது சேவைகளில் ஈடுபட்டு வந்தார். சில நேரங்களில் மக்களுக்கு பாதிக்கும் செயல்களில் மத்திய அரசோ அல்லது தமிழக அரசோ யார் ஈடுபட்டாலும் அரசுக்கு எதிராககுரல் எழுப்பி வந்தார், அதன் காரணமாக அவர் இன்று வரை பல இன்னல்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் 2016ம் ஆண்டு தன்னுடைய தாய் தேவி அவர்களின் பெயரால் தேவி அறக்கட்டளை என ஒன்றை ஆரம்பித்து அதில் ஏழை எளியோருக்கு கல்விக்கான உதவி செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் யாரேனும் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியை தொடர இயலவில்லை என்று விஷால் கேள்விப்பட்டல், அவர்களை தன்னுடைய அறக்கட்டளை ஆட்கள் அல்லது ரசிகர்கள் மூலமாக தொடர்புக்கொண்டு, அந்த மாணவர்களின் நிலையை அறிந்து அந்த ஏழை மாணவர்களுக்கு தேவி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவி செய்து வருகிறார்.

2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தும் மேற்படிப்பு தொடர முடியாத எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு  இந்த தேவி அறக்கட்டளை உதவி செய்து வருகிறது.

அவ்வாறு தனது தேவி அறக்கட்டளை மூலம் படித்து வரும் மாணவ, மாணவியர்கள் படிப்பு குறித்த சந்திப்பு சில தினங்கள் முன்பு சென்னையில் விஷால் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய விஷால் கூறியதாவது, “நீங்கள் என்னை உயர்த்துகிறீர்கள். இந்த தேவி அறக்கட்டளை உதவிகள் என்னுடைய ஒரு சிறிய முயற்சி தான். நீங்கள் படித்து நல்ல நிலைமைக்கு வாருங்கள். நீங்களும் மற்ற்வர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவியை செய்யுங்கள்.” என்றார் நாடிவரும், தேவி அறக்கட்டளை நிறுவனருமான நடிகர் விஷால்.

இந்த நிகழ்ச்சியில் விஷால் ரசிகர் மன்றத்தின் செயலாளரும், தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளருமான ஹரி மற்றும் தேவி அறக்கட்டளையை சார்ந்தவர்கள் உடனிருந்தனர்.

Leave a Response