சினிமாவில் உதயமாகிறார் அடுத்த உதய்

தான் வரைந்த ஓவியம் போல் தன் வாழ்க்கைக்கு மனைவி அமைய வேண்டும் என்று நினைக்கிறான் நாயகன். இடையில் எவ்வளவோ பெண்களை சந்திக்க நேர்ந்தாலும் யாரையும் விரும்பவில்லை. அந்த ஓவியம் போல் பெண் கிடைக்கவே தன் காதலை சொல்கிறான் நாயகன். அப்பெண் காதலை ஏற்றாளா? என்பதே கதை.
‘ஆர்ச்செர்ஸ் புரொடக்ஷன்’ சார்பில் உதய் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளார். “கிடாவிருந்து” எனும் படத்தை இயக்கிய தமிழ்செல்வன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
“மதராஸ்பட்டினத்தில்” ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. “நர்த்தகி”, “சும்மாவே ஆடுவோம்”, “டோனி கபடிக்குழு”, “எந்த நேரத்திலும்” ஏ.வி.எம்.-ன் “அந்த நாள்” போன்ற படங்களிலும், இரு மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்த லீமா இப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். ரஞ்சனி, காதல் சுகுமார், நெல்லை சிவா, அம்பானி சங்கர், தாரைதப்பட்டை காஞ்சனா, சேலம் தமிழ், செந்தில்குமார், ரமேஷ், R. சேகர், LR.விஜய், ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு சேலம், ஏற்காடு , ஹைதராபாத், ராமோஜி ஃபிலிம் சிட்டி போன்ற இடங்களில் 30 நாட்களில் இருக்கட்டப் படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

மது அருந்துகின்ற பாரில் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது. இதில் நாயகனும், ஸ்டண்ட் கலைஞர்களும் சண்டையிடும் காட்சி எடுக்கும்பொழுது அங்கு மது போதையில் உள்ளவர்கள் ‘எங்க கிட்ட வாங்கடா’ என்று வம்பிழுக்க அதை கண்டுக் கொள்ளாத நாயகனும், ஸ்டண்ட் கலைஞர்களும் மீண்டும் தன் வேலையை பார்த்தனர். ஆனால் அவர்கள் மீண்டும் வம்பிழுக்க நாயகியின் கையை பிடித்து இழுத்ததும், பொருக்காத நாயகன் போதை ஆசாமிகளை வெளுத்து வாங்கினார். இப்படத்தில் மூன்று பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்கவைக்கும்.

கே.எஸ்.உதயகுமார் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருப்பவர் தமிழ்ச்செல்வன்.

Leave a Response