இரக்க மனம் கொண்ட பிரபல நடிகர்

நடிகர்களிலேயே ராகவா லாரன்ஸ், மிகுந்த இரக்க குணம் கொண்டவர். அதனால், தான் நிறுவிய அறக்கட்டளை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு பல நல்ல உதவிகளை செய்து வருகிறார். இலவச இருதய அறுவை சிகிச்சை, வீடு இழந்தோருக்கு வீடு கட்டித் தருதல் போன்றவை பல.இது மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கு நடனப் பயிற்சி கொடுத்து அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
ராகவா லாரன்ஸ் கூறுகையில், “குழந்தைகள் தினமான இன்று, உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். என்னவெனில், ஒவ்வொருவரும் ஒரு ஏழைக் குழந்தையின் கல்விச் செலவை ஏற்க வேண்டும். ஏனென்றால், குழந்தைகள் தான் நம் நாட்டின் செல்வங்கள்”.
அவர் மேலும் கூறுகையில், “குழந்தைகளின் எதிர்காலம் நம் கையில் இருக்கிறது. அதை நாம் கவனித்துக் கொண்டால், நம் எதிர்காலத்தை அவர்கள் சிறப்பாக வழி நடத்துவார்கள்”. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response