பரோட்டா தின்னும் போட்டியில் வென்றவருக்கு கிடைத்த பரிசு கதாநாயகன்!

விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார். தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.

2009ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிகராக அறிமுகமான திரைப்படம் ‘வெண்ணிலா கபடி குத்து’. இப்படத்தில் சூரி, அப்பு குட்டி என பலர் நடிகர்களாக வெளியில் தெரியும் அளவுக்கு பிரபலமாகினர். குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்த சூரி, பரோட்டா தின்னும் காட்சி இன்று வரை பேசப்பட்டு வருகிறது. சூரி என்ற ஒரு சிறு நடிகனை பரோட்டா சூரி என பிரபலமாகியது இந்த திரைப்படம். பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த சூரி, இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார். இப்போ மேலே உள்ள தலைப்பை படியுங்கள்!

குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமைய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Leave a Response