அடடா! யோகி பாபு வராததற்கு காரணம் இதுதானா?

ஜூலை 12 அன்று உலகெங்கும் வெளியாகி தற்போது வரை வெற்றிநடை போட்டு வரும் படம் ‘கூர்க்கா’. இப்படத்தை சாம் ஆண்டன் இயக்க, யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் ரவி மரியா, மனோபாலா, சார்லி, மயில்சாமி, ராஜ் பரத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கூர்க்கா திரைப்படத்தை 4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்க அதை லிப்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டனர். இப்படம் வெளியாகி 7 நாட்களுக்குள் ஒரு கணிசமான லாபத்தை ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படம் லாபம் ஈட்டிவிட்டாலே அது வெற்றி என்று தானே கருத வேண்டும்? ஆமாம் என்பதற்கு இணங்க, கூர்க்கா வெற்றியை அறிவிக்க இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் கூர்க்கா படக்குழுவினர்.

சென்னையிலுள்ள ஒரு ப்ரிவியூ திரையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கூட, மாலை 6:00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி, இரவு சுமார் 07:50 மணிக்கு தான் ஆரம்பித்தது. தாமதத்திற்கு காரணம், படத்தின் கதாநாயகனான யோகி பாபு வருவார் என்ற எதிர்பார்ப்பு தான் என்பது தெரியவந்தது.

விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் மற்றும் படத்தை வெளியிட்ட லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திராசேகர் தெரிவித்ததாவது, “தாமதத்திற்கு மன்னிக்கவும்! யோகி பாபு இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொள்வதாக தெரிவித்தார், அவர் வந்துவிடுவார் என்று நாங்கள் காத்துகொண்டு இருந்தோம், உங்களையும் காத்துக்கொள்ள வைத்து விட்டோம். அவர் வராதது சற்று வருத்தம் தான், அவருக்கு என்ன வேலையோ! இருப்பினும் தாமதத்திற்கு மன்னிக்கவும்.” என இருவரும் பேசினர்.

விஷயம் இப்படி இருக்க, யோகி பாபுவை நம்முடைய நிருபர் தொடர்புகொண்டு விசாரித்தார். அப்போது நம் நிருபரிடம் பேசிய யோகி பாபு தெரிவித்ததாவது, தான் தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் கோமாளி திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், அந்த படத்தின் டப்பிங் பனி நடைபெற்று வருவதால் தன்னால் வர இயலவில்லை என்றார். அந்த கோமாளி படத்தில் அவர் இன்று 6 ரீல் டப்பிங் பேசி முடித்துவிட்டு, நாளை மீண்டும் ஷூட்டிங் செல்ல வேண்டுமாம். தான் எப்படியாவது வந்து விழாவில் தலைகாட்டிவிட்டு சென்று விடலாம் என ட்ரை பண்ணினாராம், ஆனால் அவரால் வர இயலவில்லையாம்! பாலாஜி மோகன் தயாரிப்பில் ஒரு படத்திலும் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து பாண்டியராஜ் இயக்கும் வேறு ஒரு படத்திலும் இந்த யோகி பாபு நடிக்கிறாராம். அப்படத்திற்கான ஷூட் வெளியூரில் நடைபெறுகிறதாம். அந்த ஷூட்டில் சுமார் 25 நாட்கள் யோகி பாபு தொடர்ந்து நடிக்க இருப்பதால், நாளை மறுநாள் அந்த ஷூட்டுக்கு அவர் கிளம்புகிறாராம். இதன் காரணமாக கோமாளி படத்தின் டப்பிங் பணியை இவர் முடித்து கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டாராம். இன்றைய விழாவில் தான் கலந்துகொள்ள முடியாததற்கு இயக்குனர் சாம் ஆண்டன் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வருத்தப்பட்டதை அறிந்து அவர்களிடம் தான் வராமல் போனதற்கான காரணத்தை சொல்லி பேசிவிட்டாராம். மற்றபடி அவருக்கும் பட குழுவினருக்கும் எந்த விதமான மனக்கசப்பும் கிடையாது என யோகி பாபு நம்முடைய நிருபரிடம் தெரிவித்தார்.

எப்படியோ இது சம்மந்தமான உண்மை இவர்களுக்கு மட்டும் தான் வெளிச்சம்.

Leave a Response