தமிழ் திரையுலகில் நல்ல பெயர் பெற்று இன்றுவரை சீரும் சிறப்புமாக இருப்பவர் ‘அபிராமி’ ராமநாதன். சென்னை புரசைவாகத்தில் ‘அபிராமி’ திரையரங்கை நடத்தி வந்ததால், ராமநாதன் என்பவர் ‘அபிராமி’ ராமநாதன் என்று அழைக்கப்பட்டு வந்தார்.
‘அபிராமி’ ராமநாதன் திரையரங்கு உரிமையாளராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பு, திரைப்பட விநியோகம், தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பு என பல தொழில்களை செய்து வருகிறார். இவருடைய ‘அபிராமி’ திரையரங்கில் வணிக வளாகமும் இருந்து வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய ‘அபிராமி’ திரையரங்கை இடித்து புதிய பொலிவுடன் சிறிய வகை திரையரங்குகள், வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகள் என அத்தனையையும் ஒரே இடத்தில் கட்டுவதாக பத்திரிகை செய்தி வெளியிட்டார். அவர் சொன்னது போலவே, திரையரங்கு இடிக்க ஆரம்பப்பிக்கப்பட்டது.
திரையரங்கு இடிக்கப்பட்ட காரணமோ என்னவோ, அவருடைய தினம்தோறும் ஈட்ட கூடிய வருமானத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது அனைவரும் அறியத்தக்க விஷயமே.
இந்த சூழலில் இப்போது வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவருடைய முதல் வெப் சீரிஸ் தயாரிப்பான ‘திரவம்’, ‘ஜீ 5’ இணையதள அப்ப்ளிகேஷனில் வெளியாகியுள்ளது. இந்த படம் மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்தவர் சந்திக்கும் இன்னல்களை சொல்லக்கூடிய வெப் சீரிஸாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இயக்க, பிரசன்னா, இந்துஜா, சுவயம்சதா, அழகம் பெருமாள், சம்பத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை சற்று சுவாரசியமாக தான் இருக்கிறது, ஆனால் துரத்தஷ்டம் படத்தில் தேவையின்றி திணிக்கப்பட்டிருக்கும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய வசனங்கள்!
ஒரு படத்திலோ அல்லது வெப் சீரிஸ்களிலோ, படத்தில் சற்று உயிரோட்டம் இருக்கவேண்டும் என்பதற்காக எங்காவது ஒன்றோ இரண்டோ ஆபாச வார்த்தைகள் இருப்பதை சகித்துக்கொள்ளலாம். ஆனால் இந்த வெப் சீரிஸில் பல இடங்களில் தேவையற்ற ஆபாச வார்த்தைகள் பார்வையாளர்கள் முகம் சுளிக்க வைக்கிறது என்பது தான் உண்மை.
திரையரங்கை இடித்துள்ள நிலையில் ‘அபிராமி’ ராமநாதன் இத்தகைய ஆபாச வார்த்தைகள் அடங்கியுள்ள வசனங்கள் நிறைந்துள்ள வெப் சீரிஸை தயாரித்துள்ளது, ஒரு திரை பிம்பமே தன்னை தானே கேவலப்படுத்தி கொண்டதாகவே தோன்றுகிறது.
‘அபிராமி’ ராமநாதனே இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து ஒரு வெப் சீரிஸ் தயாரிக்கும்போது நாம் ஏன் இத்தகைய வெப் சீரிஸ்களை தயாரிக்க கூடாது என்ற விஷத்தை விதைக்க ஆரம்பித்துவிட்டார் என்றே சொல்ல தோன்றுகிறது.
‘அபிராமி’ ராமநாதன் சற்று யோசியுங்கள், இத்தகைய ஒரு கீழ்த்தரமான வியாபாரத்தை நீங்கள் செய்ய வேண்டுமா?