பாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் – அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்..!

பாஜக கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம் என பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியமையும். இந்த கருத்து கணிப்பு, இந்தியா முழுவதும் உள்ளமக்களின் பெரும் ஆதரவை காட்டுகிறது. இதனால் மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் அமையும்.

நிலத்தடி நீர் குறைந்து வருவதற்கு காலநிலை மாற்றமே காரணம். இனிவரும் காலங்களில் வறட்சி மற்றும் வெள்ளம் மாறி மாறி வரும். இப்பிரச்னைக்கு தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுஐம்பது ஆண்டு பிரச்னை. நீர் மேலாண்மைக்கு முக்கியதுவம் கொடுத்து மழை காலங்களில் நீரை சேமிக்க வேண்டும்.

அதற்காக தான் மத்திய அரசு கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 25 மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துவோம். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். இதனால் தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மக்களுக்கு எதிரான சுற்றுசூழலுக்கு எதிரான திட்டங்களை நாங்கள் வர விடமாட்டோம். கூட்டணியில் இருந்து கொண்டே அழுத்தம் கொடுப்போம்” என்றார்.

Leave a Response