தலைகீழாக நின்றாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது. மோடியால் மீண்டும் பிரதமராக முடியவே முடியாது – திருநாவுக்கரசர்..!

நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமராக முடியவே முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எஸ் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக எஸ் திருநாவுக்கரசர் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

அதிமுக ஒரு அணியாகவும் அமமுக இன்னொரு அணியாகவும் இருந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. இனி 2 ஆண்டுகளில் மட்டும் இவர்கள் என்ன செய்து விட போகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை 120 முதல் 190 இடங்களுக்கு மேல் தலைகீழாக நின்றாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது. மோடியால் மீண்டும் பிரதமராக முடியவே முடியாது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் என்பது உறுதிய

காங்கிரஸ் தோழமை கட்சிகளோடு ராகுல் பிரதமராவது உறுதியாகிவிட்டது. அது போல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வரும் 23-ஆம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்தாலும் அதை கலைத்துவிட்டு மக்கள் முன் பொதுத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்றார்.

Leave a Response