திமுக கூட்டணி சுயநலக்கூட்டணி – முதல்வர் பழனிசாமி..!

திமுக கூட்டணி சுயநலக்கூட்டணி என்றும், சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் அவர்கள் கூட்டணி அமைத்து கொள்வார்கள் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணி சுயநலக்கூட்டணி. சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் அவர்கள் கூட்டணி அமைத்துக்கொள்வர்” எனக் கூறினார்.

மேலும், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், முழுக்க முழுக்க விவசாயிகளின் நண்பனாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது இத்தொகுதிக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அப்படியிருக்கும்போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எப்படி தொகுதிக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்துவார்? மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற தகுதிவாய்ந்த நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக வேண்டும்” என முதல்வர் பழனிசாமி கூறினார்.

Leave a Response