சாதி அரசியல் குறித்து பேசும் ‘உறியடி 2’ ஏப்ரல் 5-ம் தேதி ரிலீஸ் : அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விஜய் குமார் இயக்கி, நடித்த ‘உறியடி’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2016-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. இந்தப் படத்தின் வெற்றியால், விஜய் குமார் இயக்கத்தில் அடுத்த படம் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவியது.

யாரும் எதிர்பாராத விதமாக சூர்யா தயாரிக்க, சாதி அரசியல் குறித்து பேசும் ‘உறியடி 2’ படத்தை இயக்கினார் விஜய் குமார். இதில் அவரே நாயகனாக நடித்தார். அவருடன் விஸ்மயா, ஷங்கர் தாஸ், அப்பாஸ், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், வருகிற ஏப்ரல் 5-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் இறுதிப்பதிப்பை ப்ரிவியூ தியேட்டரில் பார்த்த தயாரிப்பாளர் சூர்யா, படம் நல்லபடியாக வந்திருப்பதில் மகிழ்ச்சியடைந்துள்ளார் ,

சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்ற இப்படத்திற்கு ‘96’ திரைப்படத்திற்கு இசையமைத்த கோபி வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Leave a Response