ராதாரவி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது திமுகவின் தேர்தல் நாடகம் – தமிழிசை தடாலடி..!

கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாராவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். நடிகர் ராதாரவியின் இந்த கருத்துக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ராதாரவியின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் ராதாரவி கழகக் கட்டுபாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு நயன்தாரா தனது நன்றியை மு.க. ஸ்டாலினிடம் பதிவு செய்தார். இந்நிலையில் இந்த நடவடிக்கை திமுகவின் தேர்தல் நாடகம் என தமிழிசை கூறியுள்ளார்.

“நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல் நேரத்து நாடகம். ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பல ஆண்டுகளாக திமுக மேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

பெண்மையை பழிப்பது திமுகவின் வாடிக்கை” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Response