பாடகராக களமிறங்கும் “ரோபோ ஷங்கர்”..!

எந்த ஒரு பெரிய இடத்துக்கு போனாலும் நாம் வந்த பாதையை திரும்பி பார்ப்பது என்பதும், அதற்கு மரியாதை செய்வதும் மிகச்சிறந்த ஒரு செயல். நடிகர் போஸ் வெங்கட் புதுமுகங்களை வைத்து இயக்குனராக அறிமுகமாகும் காதல் படத்தில் அதேபோல ஒரு செயலை செய்துள்ளார். அதில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். ஆட்டோ டிரைவர்களின் அன்றாட சோதனைகள் மற்றும் சவால்களை பற்றிப் பேசும் ஒரு பாடல் படத்தில் இருக்கிறது, இந்த பாடலை நடிகர் ரோபோ ஷங்கர் பாடியிருக்கிறார்.
இது குறித்து நடிகர் மற்றும் இயக்குனரான போஸ் வெங்கட் கூறும்போது, “நான் ஆரம்பித்த இடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். நான் ஒரு ஆட்டோ டிரைவராக என் தொழிலை துவங்கினேன், அதற்கு மரியாதை செய்ய விரும்பினேன்.
பாடல் பற்றிய கருத்தாக்கம் உருவான போதே, அதை ராகம் மற்றும் ஸ்ருதி பற்றி தெரியாத யாரோ ஒருவர் தான் அதை பாட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். நிச்சயமாக, சாதாரண ஒரு தொழிலாளி பாடுவதை போல பாடல் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். பாடலை பாட நல்ல பிரபலமான ஒரு குரலை தேடினோம், ரோபோ ஷங்கர் குரல் அதற்கு பொருத்தமாக இருந்தது. பாடலின் இறுதி வடிவம் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு சில யோசனைகள் மற்றும் அனுமானங்கள் இருந்தபோதிலும், இசையமைப்பாளர் ஹரி சாய், அவர் பங்குக்கு சில துள்ளலான விஷயங்களை சேர்த்துக் கொண்டார்.
ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அறிமுக நடிகை காயத்ரி (யார் கண்ணன் மகள்), வலீனா ப்ரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிசால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய, இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்ய, ஹரி சாய் இசையமைக்கிறார். ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கிறார்.

Leave a Response