தில்லான தாதாவாக வலம் வரும் நடிகர் “சாருஹாசன்”..!

பலரும் எதிர்பார்க்கும் தாதா87 திரைப்படம் வரும் மார்ச் 1 அன்று ரிலிசாகிறது.
உலக அரங்கில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தனது 88ம் வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஆனால் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு 87 முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற பெருமை தாதா87 திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
“Ageing Superstar” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்தில் வலம் வருகிறார்.
இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தின் டீசரும் டிரைலரும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில்  நடிகர் சாருஹாசனுடன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leave a Response