தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், தேசிய கட்சிகள் கூட்டணிக்கு ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் திமுகவுடன் தனது கூட்டணியை உறுதி செய்துவிட்டது.
இந்நிலையில் நேற்று கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்கள் கூட்டணியில் இருந்து வெளியே சென்றவர்களும் எங்களுடன் இணையலாம் என கூறினார். இதற்கு ஸ்டாலின் திமுக எக்காரணத்திலும் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஸ்டாலின் நாகரிகமாக பேச மாட்டிங்கிறார். மோடி திமுகவை குறிப்பிட்டு பேசவில்லை எனவும் ஸ்டாலின் ஏன் தேவையில்லாமல் பேசுகிறார் எனவும் கூறினார். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என தமிழிசை கூறினார்.
மேலும் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சிகளுடன் மட்டுமே அதிமுக கூட்டணி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என கூறியுள்ளார்.