பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

பழைய நண்பர்களுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி கூறியதற்கு, பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத்தேர்தல் வருவதையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிரமாக கட்சிப்பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்களுடன் நேற்று பிரதமர் மோடிகாணொலி மூலம் பேசினார். அப்போது, அவரிடம் தமிழகத்தில் அதிமுக மற்றும் ரஜினியுடன் கூட்டணியா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய நண்பர்களை வரவேற்கிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டணிஇருக்கும். கட்டாயத்தின் அடிப்படையில் இருக்காது.20 ஆண்டுகளுக்கு முன் வெற்றிகரமாக கூட்டணி அமைத்தவர் வாஜ்பாய். அவர் வழியில் கூட்டணி அமைக்கப்படும்” என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வாஜ்பாய் கலாச்சாரத்தினை பின்பற்றி பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோம்.

ஆனால், கடந்த நான்கரைஆண்டுகாலமாக பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது. வாஜ்பாயுடன், மோடி தன்னை ஒப்பிட்டுக்கொள்வது வேடிக்கையாகவும் , விநோதமாகவும்உள்ளது.நாட்டை பிளவு படுத்தும் எந்த திட்டத்தையும் வாஜ்பாய் அரசு முன்வைக்காததாலேயே அந்த கூட்டணிக்கு திமுக ஆதரவளித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response