கூட்டணி குறித்து பேச தம்பிதுரைக்கு அதிகாரம் உள்ளதா – பொன். ராதாகிருஷ்ணன்..!

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என கூற தம்பிதுரைக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலை கருத்தில் கொண்டு 10 சதவீத இட ஒதுக்கீட்டை தம்பிதுரை எதிர்க்கிறார் என்றும் இது தவறான சிந்தனை எனவும் கூறியுள்ளார்.

பொருளாதார ரீதியில் பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மாநிலங்களவையிலும் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:

பொருளாதார ரீதியிலான 10% இட ஒதுக்கீட்டின் மூலம், ஊழல் ஏற்படவும், சமூக நீதி மறுக்கப்படவும் வாய்ப்புள்ளது. திசை திருப்புவதற்காகவே பொருளாதார அளவில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தந்தால் ஊழலும் அநீதியும்தான் வரும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு; சமூக நீதிக்காகதான் இடஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Leave a Response