சிம்புவுக்கு ஜோடியாகும் ‘அடங்க மறு’ நாயகி..!

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தினைத் தொடர்ந்து, வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்திலும் இணையயுள்ளார்.

மாநாடு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது படக்குழு. அண்மையில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ படத்தில் நடித்த ‘ராஷி கண்ணா’ தான் மாநாடு படத்தின் நாயகி என்ற தகவல் வெளிவர தொடங்கியுள்ளது. இவர் இதற்கு முன் அதர்வாவிற்கு ஜோடியாக ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்தது குறிப்பிடதக்கது.

மேலும் ,இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது.சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைகிறார்.மாநாடு படத்தின் படபிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்கவிருக்கிறது.

Leave a Response