விஸ்வாசம் சண்டைக்காட்சிகள் எப்படி : திலீப் சுப்புராயன் பதில்..!

பொதுவாக தல அஜித் நடிக்கும் படங்களில் சண்டைக்காட்சிகள் மாஸாக இருக்கும்.

சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் தான் விஸ்வாசம் படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு மாஸ்டர். இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் எடுத்த அனுபவம் குறித்து திலீப் சுப்புராயன் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விஸ்வாசம் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் நிறைய புதுமை இருக்கும்.

அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக் கலைஞரையும் அவர் மதிப்பார்.. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும் குறுக்கிட மாட்டார். எப்போதும் எங்கள் முடிவுகளை முன்னெடுத்து செல்ல தயாராக இருக்கிறார். ட்ரெய்லரில் பார்த்து அனைவரும் பாராட்டும் மழை சண்டைக்காட்சியை பற்றி சிவா எனக்கு விவரித்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அஜித் சாரின் பைக் ஸ்டண்ட் பார்வையாளர்களுக்காக மிகவும் பரபரப்பாகவும், அதே நேரம் எமோஷனல் விஷயங்களையும் கொண்டிருக்கும். இதை பற்றி மேலும் சொல்ல முடியாது, அதை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்” என்றார்.

Leave a Response