அப்போ ஹீரோயின் சிம்ரன், இப்போ த்ரிஷா!

thris

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படமான துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டாலும், படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இயக்குநர் கவுதம் மேனன். சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்றும் அவருடன் அமலா பாலும் நடிக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அறிமுகமாகி பத்தாண்டுகள் கடந்த பிறகும் இன்னும் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா. இவர் சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக அறிமுகமாகி நடித்திருப்பார். இப்போது அந்த இருவருமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.  ஆனால் சூர்யாவின் நாயகி த்ரிஷா. சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகர் பார்த்திபனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மரியான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மார்க் கோனின்க்ஸ் காமிராவைக் கையாள்கிறார்.