உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்..!

சென்னையில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஊதிய முரண்பாடுகளை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 29 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளார்.

Leave a Response