பேனர் தடை : உயர்நீதிமன்ற உத்தரவு வரவேற்கதக்கது – ஸ்டாலின்..!

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பதை கட்சியினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்க தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவு வரவேற்கதக்கது எனதிமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களுக்குஇடையூறாக பேனர் வைப்பதை கட்சியினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும் எனவும், அது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Response