நாடு முழுவதும் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது – கமல்ஹாசன்..!

நாடு முழுவதும் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திரைப்பட தயாரிப்பு சங்கத்தில் நடக்கும் பிரச்னை, பொன். மாணிக்கவேல் மீதான புகார் எனபல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் பேசும் போது, “யார் சொல்வது நியாயம் என்பதை புரிந்து கொள்ள நேரம் எடுக்கிறது. நேர்மை எந்த பக்கம் இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கருத்து கூறப்பட்டால் உடனே நாம் அந்த பக்கம் சென்றுவிட முடியாது. உண்மை என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.பொன்.மாணிக்கவேல் தனக்கு அரசு அழுத்தம் தருவதாக கூறியிருக்கிறார்.

நேர்மையானவர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவது உண்மை தான். ஆனால் அதனை எதிர்கொண்டு தான் பணியாற்ற வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும். இது குறித்து விசாரிப்பதற்கு விஷால் ஒத்துழைப்பார் என்று நம்புகிறேன். இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது எல்லார் மனதிலும் இருப்பது தான்.

சீதக்காதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது போன்றவற்றுக்கு எனது படத்தில் தான் ஆரம்ப விழா நடத்தப்பட்டது என்று வருத்தப்பட்டுக்கொள்கிறேன். படம் வெளியான பிறகு அதில் ஏதேனும் ஏற்றுக்கொள்ள முடியாதப்படி இருந்தால் அதனை எதிர்த்து கருத்துக்கூறலாம். ஆனால் படம் வெளியாகும் முன்பே தடை என்று கேட்டால் ஒன்றும் செய்ய முடியாது. திரைப்படம் என்று இல்லை நாடு முழுவதும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது” என்றார்.

Leave a Response