ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு..!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வங்ககடலில் உருவான பெய்ட்டி புயல் காரணமாக தமிழக மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், 8 நாட்களுக்கு பிறகு இன்று மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர், விசைபடகுகளில் இருந்த மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

கடந்த ஒரு வாராமாக தொழில் இன்றி சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று மீன்பிடிக்க சென்றும், இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response