சத்யராஜ் சார் எனக்கு அப்பா மாதிரி – “கனா”பத்திரிகையாளர் சந்திப்பில் நெகிழ்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

யாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பாக சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ‘கனா’ படத்தை தயாரித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் மூலம் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அதையொட்டி நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சத்யராஜைப் பற்றி நெகிழ்ந்து பேசினார்.

“நான் கடுமையா உழைச்சிருக்கேன்னு எல்லோரும் சொல்றாங்க. கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும் தான் எனக்கு இருக்கு, ஆனால், அதை சாத்தியப்படுத்த அருண்ராஜா முதல் இந்த குழுவின் நிறைய நண்பர்கள் தான் என்னை உந்தி உழைக்க வைத்தார்கள்.

என்னுடைய அப்பா இருந்தால் சத்யராஜ் சார் மாதிரி தான் இருந்திருப்பார் என நினைக்கிறேன், என் அப்பா ஸ்தானத்தில் தான் அவரை வைத்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் இந்தப்படம் ஒரு புதிய முயற்சியாக இருக்கும்” என்று நெகிழ்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Leave a Response