தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தான் கூட்டணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு தான் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நேற்றுசேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின்னர் சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “திமுக தரப்பில் இன்னும் கூட்டணி அமையவில்லை. அவர்கள் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக தான் ஒன்று சேர்ந்துள்ளனர் அப்படிய ஒருவேளைராகுல் காந்தியுடன் கூட்டணி வைத்தாலும், அது திமுகவினரின் விருப்பம்.அதிமுகவைப் பொறுத்தவரையில் தேர்தல் அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் விதிகளை மீறியதால் தான் ஆலை மூடப்பட்டது. தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.

மேகதாது அணை விவாகரத்திலும் சட்டப்படி விரைவில் தீர்வு காணப்படும்’ என்றார்.

Leave a Response